தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்களுக்காக நாளை சென்னையிலிருந்து ரயில் !

வெளிமாநில தொழிலாளர்களுக்காக நாளை சென்னையிலிருந்து ரயில் !

jagadeesh

புலம்பெயர்ந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்காக நாளை சென்னையிலிருந்து மணிப்பூருக்கு ஷராமிக் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இந்தச் சிறப்பு ரயில் நாளை காலை 10 மணிக்குப் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு மணிப்பூர் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இன்று கோவையிலிருந்து 1140 புலம்பெயர் தொழிலாளர்களுடன் உத்தரப் பிரதேசம் மாநிலம் அக்பர்பூருக்கு புறப்பட்டுச் சென்றது ஷராமிக் சிறப்பு ரயில். கோவையிலிருந்து புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்குக் காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் அவர்களை ரயிலின் உள்ளே அமர வைக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தொழிலாளர்கள் செல்வதற்கான செலவுகளைத் தமிழக அரசே ஏற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து இரண்டாவது ஷராமிக் சிறப்பு ரயில் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு சென்னையிலிருந்து மணிப்பூர் புறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.