தமிழ்நாடு

சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

jagadeesh

சென்னையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு தினசரி 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு இரவு 7.45 மணிக்கும் மங்களூருக்கு இரவு 8.10 மணிக்கும் சிறப்பு ரயில்கள் புறப்படும். கொரோனா பொது முடக்கத் தளர்வுகளுக்கு பின்னர் தமிழகத்திற்குள் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் முதன் முறையாக தற்போது அண்டை மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரும் 27ஆம் தேதி முதல் தொடங்கும் ‌இந்த ரயில் சேவைகளில் முன்பதிவு அடிப்படையில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவர். முன்னதாக மைசூருக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது