ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்கான தடை நீங்கியுள்ளதால் பொள்ளாச்சியில் காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடைபெறாததால் காங்கேயம் காளைகளை விவசாயிகள் தொடர்ந்து விற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியிருப்பதால் போட்டியில் பங்கேற்க காளைகளுக்கு விவசாயிகள் தீவிரமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
குளத்தில் நீச்சல் பயிற்சி, வண்டியில் பூட்டி வேகமாக ஓட வைப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாடுபிடி வீரர்களிடம் இருந்து தப்பிப்பது குறித்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.