special train
special train file image
தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே.. 14ம் தேதி வரை முன்பதிவில்லா ரயில் சேவை!

யுவபுருஷ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை - திண்டுக்கல் இடையே இன்று முதல் 14 வரை  முன்பதிவில்லா ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி கோவையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி வழியாக மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.

அதேபோல மறுமார்க்கம் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடையும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு அதிகப்படியானோர் ரயில்களில் பயணிப்பார்கள் என்பதால் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகை நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தாலும், குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி திங்கட்கிழமையும் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.