சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலினை அருகில் கண்டு மகிழ்ந்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 190 மீட்டர் நீளம், 2.80 மீட்டர் அகலத்தில் இந்த மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, திருவான்மியூரில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மரப்பாலம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.