தமிழ்நாடு

அதிகாரியாக இருந்தாலும் முகக்கவசம் அணிந்தே பேச வேண்டும்: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அதிகாரியாக இருந்தாலும் முகக்கவசம் அணிந்தே பேச வேண்டும்: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

webteam

அதிகாரிகளாக இருந்தாலும் முகக்கவசம் அணிந்தே பேச வேண்டும்: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறியதவாது:

தண்டை, ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் பகுதிகள் சவாலான பகுதியாக உள்ளது. அந்தப்பகுதிகளில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ((கண்டெய்ன்மெண்ட்)) 25 சதவீதத்தினர் முகக்கவசம் அணிவதில்லை. அவர்கள் முககவசம் அணியவேண்டும். வீட்டிற்குள்ளே அவர்கள் இருக்கும் இடங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்கள் தானாக சோதனைக்கு முன்வர வேண்டும்.

குறுகிய தெருக்கள் சாலைகளிலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வீடு பிளீச்சிங் பவுடர், இந்திய மருத்துவ முறைகளை பின்பற்ற முதல்வர் அறிவிரைப்படி செயல்படுகிறோம். மருத்துவ மனைகளிலும் தனி மனித விலகலை கடைபிடிக்க சொல்லியுள்ளோம். கடைகளில் வேலை செய்பவர்கள், டெலிவரி ஆட்கள் ஆகியோரை பரிசோதனைக்கு அழைத்துள்ளோம்.

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்; இல்லையெனில் துணியைக்கொண்டு முகக்கவம் போல் பயன்படுத்தலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

 அதே போல பேசும்போது சிலர் முகக்கவசத்தை கீழிறக்கியபடி பேசுகின்றனர்; அது தவறு.பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாதுஅதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பெசும்போதுகூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்” என்று பேசினார்.