தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இப்படி ஒரு பேருந்து ‌நிழலகமா..? அசந்துபோகும் பயணிகள் !

தமிழ்நாட்டில் இப்படி ஒரு பேருந்து ‌நிழலகமா..? அசந்துபோகும் பயணிகள் !

webteam

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கிராம பகுதியான ஆயக்காரன்புலத்தில் கழிப்பறை, குடிநீர், இசை, எப்.எம். கெடிகாரம் போன்ற அனைத்து வசதிகளுடன் செயல்படும் பேருந்து நிழலகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பொதுவாக பேருந்து நிழலகம் என்றால் மக்கள் அமர முடியாத அளவிற்கு அசுத்தங்கள் குப்பைகூலங்கள் நிறைந்தும் சுவற்றில் திருமண போஸ்டர், சினிமா போஸ்டர், நினைவஞ்சலி போஸ்டர் என அனைத்து வகையான போஸ்டர்களும் ஒட்டப்பட்டு விளம்பர சுவாராக காட்சியளிக்கும்.

இதற்கு சற்று விதிவிலக்காக அமைந்தது தான் நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்காவில் கிராம பகுதியான ஆயக்காரன்புலத்தில் உள்ள பேருந்து ‌நிழலகம். தூய்மையாகவும் கழிப்பறை, குடிநீர், இசை, கெடிகாரம், செல்போன் சார்ஜர் போன்ற அனைத்து வசதிகளுடனும் பேருந்து நிழலகம் செயல்பட்டு வருகிறது என்றால் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கிறதல்லவா இவை அனைத்தும் உண்மைதான்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக பேருந்து நிழலகம் கட்டப்பட்டது இந்த பேருந்து நிழலகத்தை மாதிரி பேருந்து நிழலகமாக மாற்றும் முயற்சியில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் வர்த்தக சங்கம், அரிமா சங்கம் ஆகியன ஈடுபட்டது.

சுத்தமான கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நேரத்தை காட்ட கெடிகாரம், பேருந்துக்காக காத்திருக்கும் போது காதுக்கு இனிமையாக பாடல்கள், எப்.எம் ரேடியோ, செல்போன் சார்ஜர்கள் இது போன்ற வசதிகளுடன் கிராமப் பகுதியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிழலகத்தில் பயணிகளுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன

இங்கு உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர் இவர்கள் பயன்படுத்த கழிப்பறை வசதி இல்லாதால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் தற்போது பேருந்து நிழலகத்தில் பெண்;களுக்குக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த பேருந்து நிழலகத்தை சுத்தம் செய்யவும் பராமறிக்கவும் சம்பளத்திற்கு ஆள் நியமிக்கப்பட்டு நிழலகம் நாள்தோறும் தூய்மை படுத்தப்படுகிறது இந்த கிராமத்திற்கு வரும் பயணிகள் பேருந்து நிழலகத்தில் சற்று அமர்ந்து ஒய்வு எடுக்காமல் செல்லமாட்டார்கள் தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதே வேளையில் நல்லது நடந்தால் அதை பாராட்டவும் வேண்டும் சிறப்பாக செயல்படும் பேருந்து நிழலகத்தை நாமும் பாராட்டுவோம்.