தமிழ்நாடு

கோடை விடுமுறை கொண்டாட்டம்: வண்டலூரில் தொடங்கியது சிறப்பு முகாம்!

கோடை விடுமுறை கொண்டாட்டம்: வண்டலூரில் தொடங்கியது சிறப்பு முகாம்!

webteam

கோடை விடுமுறையில் மாணவர்கள் பயன்பெறுவதற்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 175 இனங்களில் 2379 எண்ணிக்கையிலான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோடை விடுமுறையில் பூங்காவிலுள்ள ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் என ஒவ்வொரு உயிரினங்கள் பற்றியும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி முதல், மே 12ந் தேதி வரை 5 குழுக்களுக்கு, 4 நாட்கள் கோடைக்கால முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்களை 5 குழுக்களாக ஒவ்வொரு குழுவிற்கும் 30 மாணவ மாணவிகள் வீதம், 5ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முகாமில் உயிரினங்களைப் பற்றியும், உயிரியல்பைப் பற்றியும் நிபுணத்துவம்பெற்றவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு விளக்குகின்றனர். முகாமில் பங்கு பெறும் மாணவ, மாணவிகள் உயிரியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்படுவதுடன், அவர்களுக்கு வருடத்திற்கு 10 முறை பூங்காவிற்கு செல்லும் இலவச நுழைவு அனுமதி வழங்கப்படவுள்ளது. பூங்காவின் இயக்குநர் தலைமையில் இன்று தொடங்கப்பட்ட முகாமின் தொடக்கவிழாவில், துணை இயக்குநர், விலங்கு மருத்துவர்கள் மற்றும் உயிரியலாளர்கள் கலந்து கொண்டு விலங்குகள் பற்றி உரையாற்றினர். இதில் 28 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அத்துடன் மாணவ, மாணவிகளுடன் “அருவி” படத்தின் நடிகை “அதித்தி பாலன்” கலந்துரையாடினார்.