தமிழ்நாடு

சென்னை திரும்புவதற்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை திரும்புவதற்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

JustinDurai

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற பயணிகள், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பயணிகள் சொந்த ஊரிலிருந்து பணிக்கு திரும்ப வசதியாக, இன்று பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு ஆயிரத்து 867 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 3 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

நாளை பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 892 பேருந்துகளும், இதர இடங்களுக்கு ஆயிரத்து 536 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. வரும் செவ்வாய்க்கிழமை, பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 634 பேருந்துகளும், பிற இடங்களுக்கு 891 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. 6ஆயிரத்து 150தினசரி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் மேலும் 9 ஆயிரத்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ஜனவரி 11 முதல் 13 ஆம் தேதி வரை பொங்கலுக்காக பயணிகள் சொந்த ஊர் செல்ல வசதியாக இயக்கப்பட்ட 9 ஆயிரத்து 868 சிறப்பு பேருந்துகளில் 4 லட்சத்து 84 ஆயிரம் பேர் பயணித்தனர்.