தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்ல 11 ஆயிரத்து 645 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 11 ஆயிரத்து 645 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. பேருந்துகளில் பட்டாசுகளை மறைத்து எடுத்துச் சென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமையாளர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவித்தார்.