மக்கள் பிரச்சினையை பேசும் அவையில் தனிப்பட்ட பிரச்சினைகளை எழுப்பக்கூடாது எனத் தெரிவித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் நேற்று பேரவையிலிருந்து வெளியேறிய நிலையில் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ''அதிமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற நான் உத்தரவிடவில்லை. தாமாகவே அவர்கள் வெளியேறினர். என் அனுமதி பெறாமல் அதிமுக உறுப்பினர்கள் பதாகையை ஏந்தி கூச்சலிட்டனர். மக்கள் பிரச்சினையை பேசும் அவையில் தனிப்பட்ட பிரச்சினைகளை எழுப்பக்கூடாது. எனினும் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையை பேச நான் அனுமதித்தேன்'' என அப்பாவு விளக்கமளித்தார்.