தமிழ்நாடு

அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது பாடகர் எஸ்பிபி-ன் உடல்..!

webteam

 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது.

மரு‌த்துவ‌ வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி செய்தும், சிகிச்சை பலன் அளிக்காததால் நேற்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பியின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுச்செல்லப்பட்டது.

தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிலேயே எஸ்பிபி உடலுக்கான இறுதிச்சடங்குகள் தொடங்கி நடைபெற்றது.  புரோகிதர்கள் மந்திரங்களை ஓத அவரது மகன் எஸ்.பி.சரண் இறுதிச்சடங்குகளை செய்தார். அதனை தொடர்ந்து அவரது உடலானது அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கத்தின் போது 24 காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கிச் சுட்டு 72 குண்டுகள் முழங்க மரியாதை செய்தனர்.