யானைகளுக்கு என தனிப் பாதை
யானைகளுக்கு என தனிப் பாதை PT Tesk
தமிழ்நாடு

ரயில் மோதி யானைகள் அடிபடுவதை தடுக்க தென்னக ரயில்வே எடுத்த அசத்தல் முயற்சி!

PT WEB

பல இடங்களில் வனப்பகுதியிலிருந்து யானைகள் ஊருக்குள் வருவது இப்போது தொடர்கதையாகி இருக்கிறது. வனப்பகுதிகளை கட்டடங்களால் மக்கள் ஆக்கிரமிப்பது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதில் கோவை மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்த வெளிவரும் சில யானைகள் ரயில்வே பாதையை கடக்க முயல்கையில், பல நேரத்தில் விபத்துக்குள்ளாகின்றன.

இனிவரும் காலத்தில் இப்படியான சூழல் அப்பகுதியில் ஏற்படாமல் இருக்க, தண்டவாளத்துக்கு அடியில் கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் யானைகள் ரயிலில் அடிபடுவதை தடுக்க முடியுமென கூறப்படுகிறது. இருப்பினும் இது நிரந்தர தீர்வல்ல என காட்டுயிர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றிய விரிவான தகவல்களை, இங்கே அறியலாம்: