பொங்கல் சிறப்பு ரயில்கள் pt desk
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

PT WEB

ரயில் எண் 06092 திருநெல்வேலி தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 12, 19 மற்றும் 26 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் மதியம் 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இதேபோல ரயில் எண் 06091 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

தெற்கு ரயில்வே

ரயில் எண். 06093 தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் 2025 ஜனவரி 13 ஆம் தேதி (திங்கட்கிழமை) தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண். 06094 கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 14, 2025 (செவ்வாய்கிழமை) மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 06.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

ரயில் எண். 06089 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 2025 ஜனவரி 12 மற்றும் 19 தேதிகளில் (ஞாயிற்று கிழமைகளில்) இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.00 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

திரும்பும் திசையில் ரயில் எண். 06090 நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர விழா சிறப்பு ரயில் 2025 ஜனவரி 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 7.00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 09.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

சிறப்பு ரயில்கள்

ரயில் எண். 06104 ராமநாதபுரம் தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் 2025 ஜனவரி 10, 12 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

திரும்பும் திசையில் ரயில் எண். 06103 தாம்பரம் ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் 2025 ஜனவரி 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (சனி, திங்கள்) மாலை 5.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05.15 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்