தமிழ்நாடு

பயணிகளின் ஆதரவின்மையால் பல ரயில்கள் சேவை ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பயணிகளின் ஆதரவின்மையால் பல ரயில்கள் சேவை ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

kaleelrahman

பயணிகளின் போதிய ஆதரவில்லாததால் பல ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக வண்டி எண் 06165 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 1ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல வண்டி எண் 06166 கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 2 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் கோயம்புத்தூர் - பெங்களூரு உதய் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல் - மைசூர் சதாப்தி சிறப்பு ரயில், கோயம்புத்தூர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், எர்ணாகுளம் - பனஸ்வாடி வாரமிருமுறை சிறப்பு ரயில், கொச்சுவேலி பனஸ்வாடி வாரமிருமுறை சிறப்பு ரயில், மைசூரு - ரேணிகுண்டா வாராந்திர சிறப்பு ரயில் ஆகியவையும் இம்மாத இறுதியில் இருந்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.