பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே, கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி வழியாக இயக்கப்படும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பயணிகள் தாம்பரம் மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக பயணிக்கலாம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 13 மற்றும் 20ஆம் தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாள் பிற்பகல் 2 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக வரும் 13 மற்றும் 20ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்தசிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மார்க்கமாக இயக்கப்படுகின்றன. வரும் 12மற்றும் 19ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் நண்பகல் 12.15 மணிக்குதூத்துக்குடியை அடையும்.
மறுமார்க்கமாக வரும் 13 மற்றும் 20ஆம்தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்றுகாலை 8 மணிக்கு தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.