தெற்கு ரயில்வே முகநூல்
தமிழ்நாடு

குவியும் மக்கள் கூட்டம்...சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு இன்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை தொடங்கியுள்ளது. போகிப்பண்டிகையான இன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள காரணத்தால், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில், பொது மக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, எழும்பூரில் இருந்து மதுரை, நெல்லை வழியே திருவனந்தபுரத்துக்கு இன்றிரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதே போல, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கப்படுகிறது.

இன்று மதியம் 2.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில், நள்ளிரவு மதுரை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.