தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 14 ஆம் தேதி போத்தனூர் செல்லும் ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 ஆம் தேதி போத்தனூரில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாகர்கோவில் முதல் தாம்பரம் வரையிலும், தாம்பரம் முதல் செங்கோட்டை வரையிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
17ஆம் தேதி நாகர்கோவிலில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10.55-க்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் தேதி தாம்பரத்தில் மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5.15-க்கு நாகர்கோவில் செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. 14 ஆம் தேதி எழும்பூரில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.17 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.05 மணிக்கு எழும்பூரை வந்தடையும் எனக் கூறப்பட்டுள்ளது.