தமிழ்நாடு

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Rasus

தென்மேற்கு பருவமழை ஜுன் 8-ஆம் தேதி கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு அரபிக் கடல் பகுதியில் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் இன்று சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, நாமக்கல், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெப்பம் வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் சற்றே மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.