தமிழ்நாடு

மருத்துவமனைக்கு தாய், தந்தை உடலை தானமாக கொடுத்த பிள்ளைகள்

மருத்துவமனைக்கு தாய், தந்தை உடலை தானமாக கொடுத்த பிள்ளைகள்

webteam

திருவண்ணாமலையில் இறப்பிற்கு பின்னர் தங்கள் தாய் மற்றும் தந்தையின் உடலை மருத்துவமனைக்கு பிள்ளைகள் தானமாக கொடுத்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டிநாயுடு தெருவில் வசித்து வந்தவர் கோபால் (73). இவர் வந்தவாசி கூட்டுறவு நிலவள வங்கியில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கோதை. இவர்களுக்கு ராம்குமார், லட்சுமண குமார் என இரண்டு மகன்கள் மற்றும் சுமதி என்ற ஒரு மகள் உள்ளனர். கோபால் மற்றும் கோதை இருவருமே உயிருடன் வாழும்போது தங்கள் பிள்ளைகளிடம் ஒரு வாக்குறுதியை பெற்றுள்ளனர். தாங்கள் இறந்த பின்னர் தங்கள் உடலைமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்பதே அந்த வாக்குறுதியாகும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தாயார் கோதை மரணமடைந்துவிட்டார். அப்போது வாக்குறுதியின்படியே, அவரது உடல் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் தந்தை கோபால் இயற்கை எய்தினார். இவரது உடலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மகன்கள், தானமாக வழங்கினர்.