தமிழ்நாடு

குடும்பத் தகராறில் மாமனாரை கொன்ற மருமகன் : காவல்நிலையத்தில் சரண்

குடும்பத் தகராறில் மாமனாரை கொன்ற மருமகன் : காவல்நிலையத்தில் சரண்

webteam

திருச்செங்கோடு அருகே மாமனாரை குத்திக்கொலை செய்த மருமகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊரக காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மோடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு இரண்டு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள். மூன்று பெண்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

இதில் இரண்டாவது மனைவியின் இளைய மகளினுடைய கணவர் நல்லமுத்து (42). இவருக்கும் ராஜாமணிக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், மூத்த மகள் குடும்பத்திற்கு மட்டுமே அனைத்து பண உதவிகளை வழங்குவதாகவும், தனது குடும்பத்திற்கு எதுவும் வழங்கவில்லை எனவும் ராஜாமணியுடன் நல்லமுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறின் முடிவில் ஆத்திரமடைந்த நல்லமுத்து மாமனார் ராஜாமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாமணி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மாமனாரை கொலை செய்துவிட்டதாக நல்லமுத்து வெப்படை காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.