தமிழ்நாடு

நாளை முதல் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு : சென்னை மாநகராட்சி

நாளை முதல் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு : சென்னை மாநகராட்சி

webteam

கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு பகுதிகள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் சென்னையில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, மண்டலம் 5-ல் மதுர வாசல் தெரு, டேவிட்சன் தெரு, மண்டலம் 9-ல் வரதராஜன்பேட்டை (சூளைமேடு), மண்டலம் 10-ல் வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை), மண்டலம் 13-ல் எல்லையம்மன் கோயில் தெரு (கோட்டூர்புரம்), மண்டலம் 14-ல் நேரு தெரு (பெருங்குடி), மண்டலம் 15-ல் எம்.ஜி.ஆர் நகர், பனையூர் ஆகிய பகுதிகளில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனவே இந்த பகுதிகளில் நாளை முதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.