மதுரையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து, அவர் அணிந்திருந்த மூன்று சவரன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார்.
திருநகரைச் சேர்ந்த சாந்தா, அதே பகுதியில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் மூதாட்டியிடம் முகவரி கேட்பதுபோல் அணுகியுள்ளார்.
திடீரென அந்த நபர், மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் நகையை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட மூதாட்டி செயினை இறுகப் பிடித்தார். இருப்பினும் மூதாட்டியை தள்ளிவிட்டு அந்த நபர் செயினை பறித்துச் சென்றார். இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.