பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கலோடு ஆதாரை இணைக்கவும், கணக்கு தொடங்க ஆதாரை கட்டாயமாக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினரின் முக்கியமான ஊடகமாக இருப்பது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர். சமூக வலைத்தளமான இவை வந்த பிறகுதான் உலக அளவில் தகவல் பரிமாற்றம் மாபெரும் வளர்ச்சியை அடைந்தது. இதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகின்றது. இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் சம்பவம் நடந்து அடுத்த சில நிமிடங்களிலே தகவல் அறிந்துக்கொள்வதையும் தாண்டி பல்வேறு பொழுதுபோக்கு விஷயங்களும் இதில் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கலோடு ஆதாரை இணைக்கவும், கணக்கு தொடங்க ஆதாரை கட்டாயமாக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.