தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் ஸ்னோலின் உடல் உள்பட 7 உடல்களுக்கு நீதிமன்ற உத்தரவையடுத்து, மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்னோலினின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அவரது சொந்த ஊரான மினி சகாயபுரத்தில் அடக்கம் செய்தனர்.