தமிழ்நாடு

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் சிரமம்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் சிரமம்

Veeramani

சென்னையில் பல்வேறு பகுதிகளில், பனிப்பொழிவு நிலவியது. கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மழை ஓய்ந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

சென்னையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஒரு சில இடங்களில், சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர்.