சென்னையில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபுறம் சிறிது சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அத்தோடு மட்டுமில்லாமல் அதிகளவில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக பல்லாவரம், அனகாபுத்தூர், விமானநிலையம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகின்றன.
இந்த பனிமூட்டத்தை பார்க்கும்போது ஊட்டியில் இருப்பது போல் மக்களுக்கு தோன்றினாலும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர். காலை 7 மணியளவில் கூட நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் முன்செல்லும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை. மேலும் கடுங் குளிரும் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.