தமிழ்நாடு

பைக் சீட்டில் ‘நல்ல பாம்பு’ - சாதுர்யமாக பிடித்த இளைஞர்கள்..!: வீடியோ

பைக் சீட்டில் ‘நல்ல பாம்பு’ - சாதுர்யமாக பிடித்த இளைஞர்கள்..!: வீடியோ

webteam

ராணிப்பேட்டையில் இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் சிக்கியிருந்த நல்ல பாம்பை இளைஞர்கள் லாவகமாக பிடித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இருசக்கர வாகனம் ஒன்றில் பாம்பு புகுந்திருப்பதை, அதன் உரிமையாளர் கண்டுள்ளார். இதையடுத்து இருசக்கர வாகனத்தை நிறுத்திய அந்த நபர், அப்பகுதியில் இருந்த இளைஞர்களின் உதவியை நாடினார். இருக்கைக்கு அடியில் புகுந்திருந்த அந்த பாம்பை பிடிக்க தயாரான இளைஞர்கள், முதலில் இருக்கையை கழட்டி எடுத்தனர்.

பின்னர் இருக்கையின் அடியில் சிக்கியிருந்த பாம்பின் உடலை பிடித்து இழுத்தனர். வெளியே எடுத்து பார்த்த போது, அது விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு என்பது தெரியவந்தது. அதைப்பிடித்த இளைஞர், சிறிது நேரம் மண்ணில் இறக்கினார். உடனே அந்தப் பாம்பு தலையை தூக்கி படமெடுத்தது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்கிருந்த இளைஞர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அத்துடன் விஷத்தன்மை கொண்ட பாம்புகளை கண்டால் வனத்துறையிடம் கூற வேண்டும் என்றும், சுயமாக பிடிக்கக்கூடாது எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த பாம்பின் நிலை என்னவானது என கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.