சீர்காழி அருகே வலையில் சிக்கிய விஷப்பாம்பை மீட்க முயன்றவர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (35). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இன்று காலை இவரது கடைக்கு அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் கொள்ளை புறத்தில் பாம்பு புகாமல் இருக்க கட்டியிருந்த வலையில் 6 அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று சிக்கியுள்ளது.
வலையில் சிக்கி உயிருக்கு போராடிய விஷப் பாம்பை ராஜசேகர் மீட்க முயன்றுள்ளார். அப்போது அந்த பாம்பு அவரது கையில் கடித்துள்ளது. இதில் விஷம் ஏறிய நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட ராஜசேகர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அரியலூரில் நாளை முழு ஊரடங்கு இல்லை - மாவட்ட ஆட்சியர்
இதையடுத்து அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்றவர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.