தமிழ்நாடு

மின்வெட்டு குறித்து எஸ்.எம்.எஸ்: மின் வாரியம் முடிவு

webteam

மின்வெட்டு குறித்த தகவல்கள் இனி முன் கூட்டியே எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கூறியுள்ளது.

இதற்காக, மின்சார நண்பன் என்ற சேவையை, மின் பகிர்மான கழகம் தொடங்கியுள்ளது. இதன்‌படி உங்கள் ஏரியாவில் மின்வெட்டு இருக்கும் என்றால் முன் கூட்டியே எஸ்எம்எஸ் அனுப்பப்படும். முதற்கட்டமாக தங்களிடம் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. விரைவில் மின்சார கட்ட‌ணம் செலுத்துவதற்கான செயலியும் அறிமுகமாக உள்ளது.