தமிழ்நாடு

பூமியில் இருந்து புகை: பொதுமக்கள் பீதி

பூமியில் இருந்து புகை: பொதுமக்கள் பீதி

webteam

பூமியில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது. தகவலறிந்த ‌வனத்‌துறையினர், அப்பகுதியில் தண்ணீர் அடித்து, புகையை‌ கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் தொடர்‌ந்து புகை வெளியேறியது. புவியியல் துறையினரின் அறிவுறுத்தல் பேரில், அப்பகுதியில் மண்ணைத் தோண்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். புகை வெளி வரும் இடத்தின் மண்ணை ஆய்வு செய்தபிறகு, இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை எனவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதே பகுதியி‌ல் கடந்த 10 ஆண்டுக்கு முன் பூமியிலிருந்து புகை வெளியேறியது. அப்போது பூமிக்கு அடியில் புதையுண்டு போன சீகை இலைகள் வெப்பமடைந்து‌ புகையை வெளியிட்டதாக புவியியல் துறையினர் தெரிவித்திருந்தனர்.