விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் ஸ்மார்ட் கார்டு குளறுபடிகளை சரி செய்வதற்கான முகாம் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் ஸ்மார்ட் கார்டுகளில் பெயர், புகைப்படம், முகவரி போன்றவை தவறாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்தது. அது குறித்து செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து, சத்திரரெட்டியபட்டியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி தலைமையில் பிழைகளை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பிழையுடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டவர்கள், ஆதார் அட்டை, பள்ளி கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவண நகல்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் திருத்தம் செய்யப்பட்ட ஸ்மார்ட் காடுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.