தமிழ்நாடு

ஸ்மார்ட் ரேசன் கார்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட் ரேசன் கார்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

webteam

அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக ஸ்மார்ட் ரேசன் கார்டு பெற விண்ணப்பிக்கும் வசதியும், ஸ்மார்ட் ரேசன் கார்டில் தேவையான விவரங்களை திருத்தம் செய்யும் வசதியும் இன்று முதல் அறிமுகமாகிறது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்பொழுது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

ஒரே இடத்தில் கூட்டத்தை தவிர்க்க அரசு இ-சேவை மையங்களில் புதிதாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை எடுத்துச் சென்றால், ஒரு மணி நேரத்திற்குள் ஸ்மார்ட் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.