அன்புச்செல்வன் முகநூல்
தமிழ்நாடு

’அரைகுறை ஆடை அணியும் பெண்கள் மீதுதான் தவறு' - சர்ச்சை கருத்தை பேசிய அன்புச்செல்வன்!

சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான அன்புச்செல்வன் , சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில், பெண்கள் மீது அதிகரிக்கும் குற்றங்கள் தொடர்பாக பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார் .

ஜெனிட்டா ரோஸ்லின்

’அரைகுறை ஆடை அணியும் பெண்கள் மீதுதான் தவறு’ என்று சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது

சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான அன்புச்செல்வன் , சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில், பெண்கள் மீது அதிகரிக்கும் குற்றங்கள் தொடர்பாக பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார் . இவரது பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் வலுத்துவருகிறது.

இது குறித்து பேசிய அவர், "பெண்கள் பாவாடை, புடவை என்று அணிய வேண்டும்; ஒழுக்கமாக இருக்க வேண்டும்; எல்லா தவறுக்கும் ஆண்கள் ஆண்கள் என சொல்வதா? அரைகுறை ஆடை அணியும் பெண்கள் மீதுதான் தவறு;

எந்த நாட்டில் தவறு நடக்கவில்லை? எல்லா இடங்களிலும் நடக்கத்தான் செய்கிறது; ஆகவே பெண்கள் மரபாக இருந்தால்தான் 'குடும்பப்பெண்' என நினைத்து ஆண்கள் அவர்களிடம் செல்லமாட்டார்கள். பெண்கள் தங்கள் உடையில் சரியாக இருந்தால் தவறுகள் குறைய நிறைய வாய்ப்புள்ளது” என்று சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.