தமிழ்நாடு

காலில் கட்டியுடன் திரிந்த குட்டியானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு

காலில் கட்டியுடன் திரிந்த குட்டியானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு

webteam

வால்பாறையில் காலில் கட்டியுடன் நடக்க முடியாமல் சுற்றித்திரிந்த குட்டி யானை இறந்தது குறித்து மானாம்பள்ளி வனத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். 

கோவை மாவட்டம் வால்பாறையில் சில நாட்களுக்கு முன் காலில் கட்டியுடன் நடக்க முடியாமல் தாய் யானை ஒன்றின் உதவியுடன் குட்டியானை ஒன்று சுற்றிவந்தது. இந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு நல்லமுடி எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் குட்டி யானை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

இதையடுத்து குட்டியானையின் உடலை கைப்பற்றி வனத்துறையின‌ர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். குட்டியானை இறந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.