வால்பாறையில் நடக்கமுடியாமல் காலில் கட்டியுடன் திரியும் குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை வனப்பகுதி அருகே சில நாட்களுக்கு முன் காலில் கட்டியுடன் நடக்க முடியாமல் சுற்றித்திரிந்த குட்டியானையை கண்ட பொள்ளாச்சி வனத்துறையினர் அதற்கு சிகிச்சை அளிக்க முற்பட்டனர். அப்போது தாய் யானையுடன் குட்டி வனப்பகுதிக்கு சென்றுவிட்டது.
இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போன நிலையில், தற்போது தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்டப்பகுதியில் அந்த யானை தென்படுகிறது. கட்டி வந்த காலுடன் நடக்க முடியாமல் அவதிப்படும் அந்த யானையை வனத்துறை மீட்டு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும், இந்த யானை அடிக்கடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.