தமிழ்நாடு

‘வெளியே போங்கள் ஓபிஎஸ்’- பொதுக்குழுவில் இபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம்

‘வெளியே போங்கள் ஓபிஎஸ்’- பொதுக்குழுவில் இபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம்

ச. முத்துகிருஷ்ணன்

ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

போக்குவரத்து நெரிசலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் சிக்கியதால், இருவரும் பொதுக்குழு வர தாமதமானது. இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் முயற்சியில் போக்குவரத்து போலீசால் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாற்றுப்பாதை வழியாக ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தை வந்தடைந்தார். மண்டபத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்ததும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை அரங்கில் இருந்தவர்கள் முழக்கங்களை எழுப்ப்பினர். ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவை விட்டு வெளியே போகச் சொல்லி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/6llFo1pdHOY" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>