விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறை பகுதியில் பாட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயை அணைக்க சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பாட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5-க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், காயம் அடைந்தவர்கள சிகிச்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.