தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ராஜினாமா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ராஜினாமா

webteam

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கார்திகேய சிவசேனாபதி ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில மாணவர்கள் இன்று ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து கார்திகேய சிவசேனாபதி என்பவர் ராஜினாமா செய்துள்ளார்.