புதிய வரைவு விதிமுறைகளை கைவிடக்கோரி விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பட்டாசுக் கடைகளை நடத்துவதற்கு புதிய வரைவு விதிமுறைகளை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை விரைவில் அமல்படுத்த உள்ளது. அதன்படி பட்டாசு கடைகள் அருகே 3 மீட்டர் இடைவெளியில் கட்டடம் அமைக்க கூடாது, பட்டாசு கடையை சுற்றிலும் 15 மீட்டர் தூரத்திற்குள் வேறு பட்டாசு கடைகள், மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் வகையிலான கட்டடங்கள் இருக்ககூடாது என்பன உள்ளிட்ட 6 புதிய வரைவு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான பட்டாசு கடைகளுக்கு உரிமம் ரத்தாகும் என்றும், இந்தியா முழுவதும் உள்ள 90 சதவீத பட்டாசு கடைகள் மூடப்படும் நிலை உருவாகும் எனவும் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.