சுற்றுப்புறச் சூழல் விதிகளிலிருந்து விலக்களிக்க கோரி நாளை முதல் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.
பட்டாசு உற்பத்தி என்பது சுற்றுப்புறச் சூழல் விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. இதிலிருந்து விலக்களிக்குமாறு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர். இதனால் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 950 பட்டாசு ஆலைகளை மூடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் மூடி போராட்டம் நடத்த திட்டமிடப்படப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.