பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம் போன்ற மாநில அளவில் வரி வருவாய் வரக்கூடிய மிக முக்கிய தொழில்கள் அமைந்துள்ள பகுதியாகவும், விளிம்புநிலைச் சமூகங்கள், சிறுதொழில் புரிவோர், கூலித் தொழிலாளர்கள், சிறுபான்மையினர், வியாபாரிகள் நிறைந்த தொகுதியாகவும் சிவகாசி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியுடன் நீண்டகாலம் பிணைப்பில் இருந்த தொகுதி என்றால், அது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தொகுதிதான். 1957 முதல் 2006 வரை நடைபெற்ற 12 தேர்தல்களில் காங்கிரஸ், சுதந்திர கட்சி, திமுக, ஜனதா, அதிமுக, தமாக, மதிமுக எனப் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்ற தொகுதி.
ஆனால், கே.டி.ஆருக்கு இரண்டு முறை தொடர் வெற்றிகளைத் தந்தது சிவகாசி. 2011 தேர்தலில் முதல்முறையாக களம்கண்ட கே.டி.ராஜேந்திர பாலாஜி, சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் 14,748 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம் போன்ற மாநில அளவில் வரி வருவாய் வரக்கூடிய மிக முக்கிய தொழில்கள் அமைந்துள்ள பகுதியாகவும், விளிம்புநிலைச் சமூகங்கள், சிறுதொழில் புரிவோர், கூலித் தொழிலாளர்கள், சிறுபான்மையினர், வியாபாரிகள் நிறைந்த தொகுதியாகவும் சிவகாசி உள்ளது.
இந்த தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 25 ஆயிரத்து 461 வாக்காளர்கள் உள்ளனர். அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டுவந்துள்ளார் கே.டி.ராஜேந்திர பாலாஜி. சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது, ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றது.
கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், பாதாள சாக்கடைத் திட்டம், ரயில்வே மேம்பாலம் என நிறையவே செய்திருக்கிறார் அவர். 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ராஜேந்திர பாலாஜி, இந்த முறை சிவகாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். அங்கு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நாதக சார்பில் டயானா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த முறை தவெகவும் உள்ளதால் சிவகாசி களம் சூடுபிடித்துள்ளது.