தமிழ்நாடு

சிவகங்கை: நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற பாரம்பரிய செவ்வாய் சமத்துவ பொங்கல் விழா

kaleelrahman

சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் பாரம்பரியமிக்க செவ்வாய் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் ஆண்டுதோறும், தை மாதம் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த முதல் செவ்வாய்க்கிழமை, ஸ்ரீ கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு 917 பானைகளில் பொங்கல் வைத்து விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கில் சுற்றுப்புற கிராம மக்கள் கூடுவதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டினரும் பார்வையாளர்களாக கலந்து கொண்டு விழாவை கண்டு ரசிப்பர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் விழா எளிமையாக நடைபெற்றது.

ஒரு ஆண்டுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் நகரத்தார்கள், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொள்வதோடு தங்களது பிள்ளைகளுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடுவர் என்பது இவ்விழாவின் குறிப்பிடதக்க சிறப்பு அம்சமாகும்.