பொங்கல் வைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர் pt desk
தமிழ்நாடு

சிவகங்கை | கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர்!

திருப்பத்தூரில் தமிழர் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கல்லூரி மாணவ மாணவிகளுடன் இணைந்து வெளிநாட்டவர் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

PT WEB

செய்தியாளர்: நைனா முகம்மது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பத்தாம் ஆண்டு பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்தனர்.

பொங்கல் வைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர்

கல்லூரி மாணவ, மாணவியர்கள் சார்பாக அவர்களுக்கு தாரை தப்பட்டை முழங்க கரகாட்டம், ஒயிலாட்டத்தோடு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை குடிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து பல்வேறு பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நற்கழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெளிநாட்டினர் இவ்விழாவில் தாங்கள் கலந்து கொண்டது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாக தெரிவித்தனர்.