நடிகர் வடிவேலு pt desk
தமிழ்நாடு

சிவகங்கை | கீழடி அருங்காட்சியகத்தில் வடிவேலு..!

திருப்புவணம் அருகே கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழையான பொருட்களை நடிகர் வடிவேலு பார்வையிட்டு கேட்டறிந்தார்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

சிவகங்கை மாவட்டம திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய அரசு மூன்றுகட்ட அகழாய்வை மேற்கொண்டது. இதையடுத்து 10 கட்டங்களாக மாநில தொல்லியல்துறை, கிழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டனர்.

அதில் கிடைத்த கண்ணாடி மணிகள், சூது பவளம், யானை தந்தத்தில் ஆன ஆட்டக்காய், செம்பிலான பொருட்கள், தங்கத்தாலான பொருட்கள் உள்ளிட்ட சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டு பழந்தமிழர் நாகரீகம் குறித்து கேட்டறிந்து வியந்தார். மேலும் இந்த அகழாய்வு நடைபெற்ற கீழடி கிராமம் வடிவேலுவின் தாயார் பிறந்த ஊர் எனவும் அந்த மண்ணில் நம்முடைய பாரம்பரியம் தோண்ட, தோண்ட கிடைத்துள்ளது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.