தமிழ்நாடு

சீர்காழி: பக்தர்களின்றி நடைபெற்ற வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா

webteam

சீர்காழி அருகே உள்ள பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலின் குடமுழுக்கு விழா பக்தர்களின்றி நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழா, கொரோனா கட்டுப்பாடுகளால் எளிமையாக நடைபெற்றது. விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 8-ஆவது கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து அனைத்து யாகசாலைகளிலும் மகாதீபாராதனை நடைபெற்றது.

பின்னர், யாகசாலையில் இருந்து புனிதநீர் கோபுர விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதினம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுள்ளதால் சாலைகள் வெறிச்சோடின.