நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு சென்றார். எனவே இவரை வழியனுப்பி விட்டு இவரது குடும்பத்தினர் சென்னையிலிருந்து காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது சீர்காழியை அடுத்த கோவில்பத்து சந்திப்பு பகுதியில், எதிரே வந்த டேங்கர் லாரி மீது இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சரவணின் தாய், தந்தை மற்றும் மனைவி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரது மகன், உறவினர்கள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் சீர்காழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், விபத்து குறித்து சீர்காழி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.