தமிழ்நாடு

2.0 திட்டத்தின் கீழ் சென்னை சிட்டியை அழகுப்படுத்தும் பணி தீவிரம் - கண்கவரும் ஓவியங்கள்

சங்கீதா

சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் வரையப்பட்டுள்ள கண்கவரும் ஓவியங்கள் காண்போரை மகிழ்வித்து வருகிறது.

2.0 திட்டத்தின் கீழ் சென்னையை அழகுப்படுத்தும் நோக்கத்தோடு மாநகராட்சி மற்றும் மெட்ரோ நிர்வாகம் இணைந்து ஓவியம் வரையும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், அரசு பொதுக் கட்டிடங்கள், மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள தூண்களில் என வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பெண்கள் விவசாய வேலை செய்வது போன்றும், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தேயிலையைப் பறிப்பது போன்றும், பெண்கள் வாகனம் ஒட்டுவது ,கோலங்கள் போடுவது போன்றும் ஓவியங்கள் மிக நேர்த்தியாக வரையப்பட்டு உள்ளன. மேலும் விலங்குகள், காடுகள், பறவைகள், பூக்கள், நாட்டின் புராதனச் சின்னங்கள் ஆகியவையும் வரையப்பட்டுள்ளன.