தமிழ்நாடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டம்: 1,010 சாலைகளை சீரமைக்க ரூ.147.18 கோடி ஒதுக்கீடு

Veeramani

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 147 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஆயிரத்து 10 சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 622 உட்புற தார் சாலைகள், 307 கான்கிரீட் சாலைகள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் 147 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்ய, இணையவழி ஒப்பந்தங்களாக இ-டெண்டர் முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.