சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்திருந்த மனுவில், “என்னை அவதூறாக பேசியதற்காக நடிகர் சிங்கமுத்து, 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும். மேலும் வாய் மொழி மூலமாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ டிஜிட்டல் முறையிலேயோ என்னைப்பற்றி இனி அவதூராக பேசக்கூடாது என்று சிங்கமுத்து உறுதி அளிக்கவேண்டும். என்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் வடிவேலுக்கு எதிராக எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்கப்போவதில்லை என்று நடிகர் சிங்கமுத்து பதில் மனு அளித்துள்ளார். முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வடிவேலு பற்றி அவதூறாக பேசக்கூடாதென சிங்கமுத்துவுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.